Monday, 26 September 2011

Guelphல் Begging Bear திரும்ப வந்தது..!

Begging Bear மீள் நிர்மாணிக்கப்படுகின்றது.
கடந்த March மாதம் Guelph University க்கு அருகில் இருந்த Begging Bear மீது இளைஞர்கள் கூட்டம் ஒன்று தாவி ஏறி விளையாடியதில் (?) இந்த Begging Bear  குடைசாய்தது. இதனால் இந்த Begging Bear  சிலை உருக்குலைந்த நிலையில் அப்போது அப்புறப்படுத்தப்பட்டது.

தற்போது Begging Bear பழையபடி தனது இருப்பிடத்திற்கு புதிப்பிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குண்டான செலவு 11,300 டாலர்களாகும்! அன்று இந்த இடத்தை கடந்து சென்ற வாகனங்கள் அனைத்தும் தம் மகிழ்ச்சியை தெரிக்கும் முகமாக Horn அடித்துச்சென்றனர்.

இந்த இளைஞர்கள் கூட்டம் பற்றிய தகவல் அறிய பொலிசார் மக்களின் உதவியை நாடியிருந்தும், இதுவரை  எவரையும்  கண்டுபிடிக்கப் படவில்லை என பொலிசார் இன்று தெரிவித்தனர்.

 Carl Skelton என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1999ல் நிர்மாணிக்கப்பட்டது. 71/2 அடி உயரமும், 350 lbs நிறையும் கொண்டது இந்த சிலை.

No comments: