Monday, 5 March 2012

கனடாவில் சூப்பர் விசா அறிமுகம்!

புதிய பத்தாண்டு சிறப்பு நுழைவுரிமை  கனடாவில் அறிமுகம்!
பணிநிமித்தமாக, கனடாவிற்கு சென்று தங்கியுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக கனடா அரசு “சூப்பர் விசா” (சிறப்பு நுழைவுரிமை)என்ற ‌பெயரிலான புதிய விசாவை கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.  முதற்கட்டமாக, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொண்டதாக இந்த விசா வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் கனடிய நாட்டு மக்களின் கோரிக்கையை அடுத்து பெற்றோர் மற்றும் தாத்தா , பாட்டிமார்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் விசாவின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இந்த விசாவை புதுப்பிக்கும் காலத்தில், 1 ஆண்டு வரை அவர்கள் கனடா நாட்டில் தங்க எவ்வித தடையுமுமில்லை. இந்த விசாவிற்கு விண்ணப்பித்து, 8 வார கால அளவில் சூப்பர் விசாவை பெறக்கூடிய வ‌கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜசோன் கென்னி தெரிவித்துள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும் ஆண்டுக்கு 40,000 விண்ணப்பங்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டு வந்ததாலேயே இந்த விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்   கனடிய குடிவரவுத்துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments: