நேற்று ஒரு தமிழ் நேயர் வீட்டில் அவர்கள் இல்லாதபோது அவரது வீட்டை உடைத்து சூறையாடியுள்ளனர் திருடர்கள்! இவ்வளவிற்கும் அவரது வீடு அதிக ஆள் நடமாட்டம் உள்ள தெருவில் அமைந்துள்ளது.
அண்மையில் இது போல் இன்னும் பல திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 3தமிழர்கள் வீடும் 4 இந்தியர்கள் வீடும் அடுத்தடுத்து உடைக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதுவும் முன் வாசல் கதவை உடைத்தே உள் புகுந்துள்ளனர்.
இனிமேல் அனைவரும் இவ்விடயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். அனைவரையும் இவ்வகையான திருட்டுக்கள் நடைபெறாது உங்கள் வீடுகளை காப்பாற்ற ஆவன செய்யுங்கள்! இவ்வகையான திருட்டுக்களை எவ்வாறு தடுப்பது என்று உங்களது ஆலோசனைகளை எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment