Wednesday, 13 November 2013

Google Mapல் வர இருக்கும் Guelph ன் பிரதான வீதி மாற்றம்!

வெகு விரைவில் Google Mapல் வர இருக்கும் மாற்றங்களையும், Guelph நகரில் South End என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள வீதிகளில் பிரதான மாற்றங்களையும் இங்கு பார்க்கலாம்.

  • Clair Road இல் இருந்து Hwy6 (Hanlon Pkwy) க்கு செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.
  •  Hwy6 (Hanlon Pkwy) க்குச் செல்ல இனிமேல் Laird Road மூலம் உள்ள ramp line கள் உபயோகத்தில் புதிதாக வந்துள்ளது. Hwy6 North க்குச் செல்ல Laird Roadன் வலதுபுறமாக- பாலத்திற்கு முன்னர் உள்ள ramp line மூலம் வெளியேறவேண்டும். Hwy6 Southக்குச் செல்ல,  Laird Roadல் பாலத்தில் ஏறி முதலில் வரும் வலப்பக்கத்து ramp line மூலம் வெளியேறவேண்டும்.
  • Hwy6 (Hanlon Pkwy) க்கில் இருந்து Clair Road க்கு வரும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. 
  • . Hwy6 Southல் இருந்து வருபவர்கள் Laird Roadக்கு முன்னர் வரும் ramp line மூலம் பாலத்தின் மீது ஏறி, வரும் signal lightல் இடப்புறம் திரும்பி Laird Roadமூலம் Clair Roadஐ அடையலாம்.  Hwy6 Northல் இருந்து வருபவர்கள்  Laird Roadக்கு முன்னர் வரும் ramp line மூலம் பாலத்தின் மீது ஏறி, வரும் signal lightல் வலப்புறம் திரும்பி Laird Roadமூலம் Clair Roadஐ அடையலாம்.


தற்போது  உள்ள Google Mapல் உள்ள வரைபடத்தை கீழ் உள்ள படத்தில் காணலாம். இவ் வீதி அமைப்பு மாற்றி அமைக்கும் வரை மேல் உள்ள வரைபடத்தை கவனத்தில் கொள்ளலாம்.