Sunday, 6 October 2013

திருமதி.மேரி ஜொசப்பின் சவரிமுத்து அவர்களின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்



திரு.சுரேஸ் அவர்களின் அன்னையார் திருமதி.மேரி ஜொசப்பின் சவரிமுத்து (பாக்கியம்) அவர்களின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்வருமாறு...

பார்வைக்கு:
ஞாயிற்றுக்கிழமை 06/10/2013, 04:00 பி.ப — 08:30 பி.ப
திங்கட்கிழமை          07/10/2013, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, On M1T 3K3


View Larger Map
-----------------------------------------------------------------------------------------------
திருப்பலி:
திகதி: திங்கட்கிழமை 07/10/2013, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St. Thomas Apostle 14, High Gate Dr, Markkam
(905) 474-1224



View Larger Map
-------------------------------------------------------------------------------------------------
நல்லடக்கம்:
திகதி: திங்கட்கிழமை 07/10/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: CHRIST THE KING CEMETERY, 7770, Steeles Avenue, Markkam, On, L6B 1A8
தொலைபேசி 905 471 0121


View Larger Ma
பின்னர்இதனைத்தொடர்ந்து  இலக்கம் 42 Tuxedo Court, Toronto, ON வில் மதிய போசனம் இடம்பெறும்.

 மேரி ஜொசபின் சவரிமுத்துஅவர்களின் மரண அறிவித்தல்

யாழ். நெல்லியடி வதிரியைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜொசபின் சவரிமுத்து  (பாக்கியம்) அவர்கள் 03-10-2013 அன்று கனடா ON Guleph ல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து(C.T.B.O.I.C- Jaffna) அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துறை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்டன்(ஜெர்மனி), மேரி எலிசபெத்ராணி(பிரான்ஸ் Pontoise), சார்ளஸ்(மொன்றியல்), மேரி வசந்தி(மொன்றியல்), பிலிப் ஜெயா(Guleph ON), டொமினிக் விசயா(ரொரன்ரோ), மேரி சாந்தினி(Guleph ON), ஜொன்சன் சுரேஸ்(Guleph ON), டொரிஸ் க்ளின்டி(மொன்றியல்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாசிலா(ஜெர்மனி), கிரிசோஸ்தம் சேவியர்(பிரான்ஸ்), தமயந்தி(மொன்றியல்), கிரிஸ்டி(மொன்றியல்), ஆன் ஸ்ரீ(Guleph  ON), ராகினி(ரொரன்ரோ), சுதாகரன்(Guleph ON), சியாமளா(Guleph ON), அன்டன் பிரான்சிஸ்(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சுரேஸ்(மகன்) +15198363209
ஜெயா(மகன்)  +12262034333
சுதா(மகள்)       +15198301552
விசயா(மகன்) +14164202169
சார்ளஸ்(மகன்) +15142434305 & +15142616649
மேரி(மகள்)     +15146838080
டொரிஸ்(மகள்) +14389927897

Dr.தட்ஷிகா பார்த்திபன் அவர்களின் ROGERS TV Talk Show

எம் நேயரான Dr.தட்ஷிகா பார்த்திபன் அவர்கள் அண்மையில் ROGERS TV க்கு வழங்கிய ஒரு கலந்துரையாடலில் நல்ல அரிய விடயங்களை வழங்கியிருந்தார். எம் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை என்பது எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும், என்ன வகையான பரிசோதனைகளை நடத்தவேண்டும், என்னென்ன Programmeங்கள், சலூகைகள் நம் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெறுகின்றது என்பன பற்றியும் பல அரிய தகவுகளை வளங்கியிருந்தார்.
Dr.தட்ஷிகா பார்த்திபன் அவர்கள் இவ் வட்டாரத்தில் உள்ள முதலாவது ஒரே ஒரு தமிழ் கண் மருத்துவர் என்பது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர் Roockwood மற்றும் Guelph நகரங்களில் தனது கண் மதுத்துவ நிலையங்களை சிறப்பாக நடத்தி வருகின்றார். இவரது நிலயத்தில் – அதி நவீன தொழில்நுட்ப கருவிகளை வைத்துள்ளார். அனேகமாக இவ்வகையான கருவிகளை முதல் முதலில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து, தனது நிலையத்தில் வைத்து தனது கண் மருத்துவ நிலையத்தை நடாத்தி வருகின்றார். இவரது websiteக்குச் செல்ல http://www.eyepractice.ca/
அவர் ROGERS TV க்கு வழங்கிய ஒரு கலந்துரையாடலை காண கீழே உள்ள linkக்கு விஜயம் செய்யுங்கள்.