Wednesday 13 November 2013

Google Mapல் வர இருக்கும் Guelph ன் பிரதான வீதி மாற்றம்!

வெகு விரைவில் Google Mapல் வர இருக்கும் மாற்றங்களையும், Guelph நகரில் South End என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள வீதிகளில் பிரதான மாற்றங்களையும் இங்கு பார்க்கலாம்.

  • Clair Road இல் இருந்து Hwy6 (Hanlon Pkwy) க்கு செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது.
  •  Hwy6 (Hanlon Pkwy) க்குச் செல்ல இனிமேல் Laird Road மூலம் உள்ள ramp line கள் உபயோகத்தில் புதிதாக வந்துள்ளது. Hwy6 North க்குச் செல்ல Laird Roadன் வலதுபுறமாக- பாலத்திற்கு முன்னர் உள்ள ramp line மூலம் வெளியேறவேண்டும். Hwy6 Southக்குச் செல்ல,  Laird Roadல் பாலத்தில் ஏறி முதலில் வரும் வலப்பக்கத்து ramp line மூலம் வெளியேறவேண்டும்.
  • Hwy6 (Hanlon Pkwy) க்கில் இருந்து Clair Road க்கு வரும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. 
  • . Hwy6 Southல் இருந்து வருபவர்கள் Laird Roadக்கு முன்னர் வரும் ramp line மூலம் பாலத்தின் மீது ஏறி, வரும் signal lightல் இடப்புறம் திரும்பி Laird Roadமூலம் Clair Roadஐ அடையலாம்.  Hwy6 Northல் இருந்து வருபவர்கள்  Laird Roadக்கு முன்னர் வரும் ramp line மூலம் பாலத்தின் மீது ஏறி, வரும் signal lightல் வலப்புறம் திரும்பி Laird Roadமூலம் Clair Roadஐ அடையலாம்.


தற்போது  உள்ள Google Mapல் உள்ள வரைபடத்தை கீழ் உள்ள படத்தில் காணலாம். இவ் வீதி அமைப்பு மாற்றி அமைக்கும் வரை மேல் உள்ள வரைபடத்தை கவனத்தில் கொள்ளலாம்.


Sunday 6 October 2013

திருமதி.மேரி ஜொசப்பின் சவரிமுத்து அவர்களின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்



திரு.சுரேஸ் அவர்களின் அன்னையார் திருமதி.மேரி ஜொசப்பின் சவரிமுத்து (பாக்கியம்) அவர்களின் இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்வருமாறு...

பார்வைக்கு:
ஞாயிற்றுக்கிழமை 06/10/2013, 04:00 பி.ப — 08:30 பி.ப
திங்கட்கிழமை          07/10/2013, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East, Scarborough, On M1T 3K3


View Larger Map
-----------------------------------------------------------------------------------------------
திருப்பலி:
திகதி: திங்கட்கிழமை 07/10/2013, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: St. Thomas Apostle 14, High Gate Dr, Markkam
(905) 474-1224



View Larger Map
-------------------------------------------------------------------------------------------------
நல்லடக்கம்:
திகதி: திங்கட்கிழமை 07/10/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: CHRIST THE KING CEMETERY, 7770, Steeles Avenue, Markkam, On, L6B 1A8
தொலைபேசி 905 471 0121


View Larger Ma
பின்னர்இதனைத்தொடர்ந்து  இலக்கம் 42 Tuxedo Court, Toronto, ON வில் மதிய போசனம் இடம்பெறும்.

 மேரி ஜொசபின் சவரிமுத்துஅவர்களின் மரண அறிவித்தல்

யாழ். நெல்லியடி வதிரியைப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி கிழக்கு கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜொசபின் சவரிமுத்து  (பாக்கியம்) அவர்கள் 03-10-2013 அன்று கனடா ON Guleph ல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து(C.T.B.O.I.C- Jaffna) அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னுத்துறை அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்டன்(ஜெர்மனி), மேரி எலிசபெத்ராணி(பிரான்ஸ் Pontoise), சார்ளஸ்(மொன்றியல்), மேரி வசந்தி(மொன்றியல்), பிலிப் ஜெயா(Guleph ON), டொமினிக் விசயா(ரொரன்ரோ), மேரி சாந்தினி(Guleph ON), ஜொன்சன் சுரேஸ்(Guleph ON), டொரிஸ் க்ளின்டி(மொன்றியல்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாசிலா(ஜெர்மனி), கிரிசோஸ்தம் சேவியர்(பிரான்ஸ்), தமயந்தி(மொன்றியல்), கிரிஸ்டி(மொன்றியல்), ஆன் ஸ்ரீ(Guleph  ON), ராகினி(ரொரன்ரோ), சுதாகரன்(Guleph ON), சியாமளா(Guleph ON), அன்டன் பிரான்சிஸ்(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
சுரேஸ்(மகன்) +15198363209
ஜெயா(மகன்)  +12262034333
சுதா(மகள்)       +15198301552
விசயா(மகன்) +14164202169
சார்ளஸ்(மகன்) +15142434305 & +15142616649
மேரி(மகள்)     +15146838080
டொரிஸ்(மகள்) +14389927897

Dr.தட்ஷிகா பார்த்திபன் அவர்களின் ROGERS TV Talk Show

எம் நேயரான Dr.தட்ஷிகா பார்த்திபன் அவர்கள் அண்மையில் ROGERS TV க்கு வழங்கிய ஒரு கலந்துரையாடலில் நல்ல அரிய விடயங்களை வழங்கியிருந்தார். எம் குழந்தைகளுக்கு கண் பரிசோதனை என்பது எவ்வளவு முக்கியமானது என்பது பற்றியும், என்ன வகையான பரிசோதனைகளை நடத்தவேண்டும், என்னென்ன Programmeங்கள், சலூகைகள் நம் குழந்தைகளுக்கு கிடைக்கப்பெறுகின்றது என்பன பற்றியும் பல அரிய தகவுகளை வளங்கியிருந்தார்.
Dr.தட்ஷிகா பார்த்திபன் அவர்கள் இவ் வட்டாரத்தில் உள்ள முதலாவது ஒரே ஒரு தமிழ் கண் மருத்துவர் என்பது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். இவர் Roockwood மற்றும் Guelph நகரங்களில் தனது கண் மதுத்துவ நிலையங்களை சிறப்பாக நடத்தி வருகின்றார். இவரது நிலயத்தில் – அதி நவீன தொழில்நுட்ப கருவிகளை வைத்துள்ளார். அனேகமாக இவ்வகையான கருவிகளை முதல் முதலில் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்து, தனது நிலையத்தில் வைத்து தனது கண் மருத்துவ நிலையத்தை நடாத்தி வருகின்றார். இவரது websiteக்குச் செல்ல http://www.eyepractice.ca/
அவர் ROGERS TV க்கு வழங்கிய ஒரு கலந்துரையாடலை காண கீழே உள்ள linkக்கு விஜயம் செய்யுங்கள்.

Wednesday 7 August 2013

திரு.கணபதிப்பிள்ளை தம்பிப்பிள்ளை அவர்கள் காலமானார்

vilakku_rightoie_vilakku_right

அமரர்.கணபதிப்பிள்ளை தம்பிப்பிள்ளை

தோற்றம் 10.04.1932        மறைவு 01.08.2013

யாழ். ஸ்ரான்லிக் கல்லூரி வீதி கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தம்பிப்பிள்ளை அவர்கள் 01-08-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி  தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சுந்தரம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மசீலன் (கனடா), குணசீலன் (பொறியியலாளர் இலங்கை மின்சாரசபை வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிரவேல் (ஓய்வுபெற்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர்), காலஞ்சென்றவர்களான மகாராஜா, தர்மலிங்கம் மற்றும் சோதிநாதன் (சோதி ஸ்ரோர்-கச்சேரியடி),  சரஸ்வதி, காலஞ்சென்ற சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, கனகராஜா (பவளம்-பிரான்ஸ்), புனிதம்மா, சரோஜினிதேவி, சீதாதேவி, வரதராஜா (வரதன்-கனடா), பத்மாவதி (கொழும்பு), புவனேந்திரராஜா (ராஜா-கனடா), தம்பிராசா (ராஜூ-கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துமதி(கனடா), ஆனந்தரஜினி(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கேசிகன், சஸ்மிதன்(கனடா), ஆரோகணன், அருணோதயன், அகிலோசன் (வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்:

வெள்ளிக்கிழமை - மாலை 5 மணிமுதல் 9 மணிவரை  கீழ் கண்ட முகவரியில்
பார்வைக்கு வைக்கப்படும்.


Gilbert MacIntyre & Son Funeral Home
1099 Gordon Street Guelph, Ontario N1G 4X9
Phone: 519-821-5077






View Larger Map
பின்னர் சனிக்கிழமை காலை 8 மணிமுதல் 10.30 மணிவரை இறுதிக்கிரிகைகள் இடம்பெற்று கீழ் கண்ட முகவரியில் தகனம் செய்யப்படும்.

Woodlawn Memorial Park
762 Woolwich Street
Guelph, ON N1H 3Z1, Canada


View Larger Map


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறும் ஏனைய நம் சமூக நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் தாழ்மையுடன்  கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தர்மசீலன்(சீலன்) — கனடா தொலைபேசி:    +15198279641
                                                          செல்லிடப்பேசி:    +12265000216
குணசீலன்(குணா) — இலங்கை செல்லிடப்பேசி:    +94716818259

Tuesday 11 June 2013

சமோசா எக்ஸ்பிறஸ் - ஸ்பெஷல் டீல்

நாளைமுதல் (12 june 2013) சிலதினங்களுக்கு குவல்பில் உள்ள சமோசா எக்ஸ்பிறஸ் ஸ்தாபனத்தார் அரிய சலூகை விலையில் சில உணவுகளை தயாரிக்க உள்ளனர்.
  • 25 இட்டலி (சட்டினி + சாம்பார்) = $ 15.00
  • மாசாலா தோசை = $ 4.00
  • தோசை = $ 1.00
இவ் அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கு நீங்கள் ஆகக்குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் தொடர்புகொள்ளலாம்.
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 
519 780 1231

Monday 10 June 2013

Canada’s Wonderland Ticket மலிவு விலையில்...!

Canada’s Wonderland Tickets – On Sale Now!

குடும்பத்துடன் குதூகலிக்கும் Wonderlandக்குச் செல்ல நுளைவுச்சீச்சு மலிவு விலையில் தருகின்றனர் Guelph Mercury நிறுவனத்தினர்.
Purchase your discount Canada’s Wonderland Tickets at the Guelph Mercury Office today!
Adult – $37.41 plus tax
Junior/Senior – $29.58 plus tax
Pay ONCE, visit TWICE – $48.80 plus tax
The Guelph Mercury is donating a $2.00handling fee associated with selling these tickets to Newspapers in Education.
For more information, call 519-822-7771
Tickets can be purchased at the main lobby, 8-14 Macdonell St. Guelph, between 8:30-5:00 Monday-Friday.
Cash, VISA, MasterCard and Interac accepted.
Not valid for Halloween Haunt.

Monday 11 March 2013

பாத உபாதைகளில் இருந்து நிவாரணம்



Tisho Foot Care


பாத உபாதைகளில் இருந்து நிவாரணம்(உங்கள் வீடுகளில்)


நீரிழிவு நோயாளார்கள்,வயோதிபர்கள் ,பார்வைகுறைந்தோர் ,இயற்கையாக பாதங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக
  1.  விகாரமான நகவளர்ச்சிகள்
  2.   நகங்களில் நோவுகள், நிறமாற்றம், அழகற்ற நகங்கள்
  3.   பாதங்களில் பித்தவெடிப்புகள்
  4.   பங்கசு தொற்றிய நகங்கள் துர்நாற்ற பாதங்கள்
  5.   பொருத்தமற்ற பாதணிகளினால் ஏற்படும் கடினதோல் வளர்ச்சிகள் (Callus)
  6.   ஆணிக்கூடுகள் (Corns)
  7.    நீரிழிவு நோயாளர்களின் பாதங்களில் ஏற்படும் உணர்ச்சியற்ற தன்மை 
  8.    காயங்கள் ஏற்படல் 
போன்றவற்றிற்கு தகுந்த நிவாரணம் பெற விசேட சான்றிதழும் பயிற்ச்சியும் பெற்ற தாதி ஒருவரின் உதவி மிக முக்கியமானது.

தமிழ் மொழியில் உரையாடி உங்களுக்கான அறிவுரைகள் வழங்குவதுடன் தாதி அனுபவத்துடனான முறையான தொற்றுகையற்ற கீழ்வரும் சிகிச்சைகள் உங்கள் வீடுகளுக்கே வருகை தந்து வழங்கப்படுகின்றது.

  • தொற்றுகையற்ற முறையில் நகங்களை சுத்தம் செய்து வெட்டுதல் 
  • கடினதோல் ஆணிக்கூடு போன்றவற்றை அகற்றுதல் 
  • முறையான பாதப்பரிசோதனை செய்தல்
  • நீரிழிவு நோயாளர்களிட்கான கற்கைநெறிகள் 
  • பித்தவெடிப்புக்கான நிவாரணம் 
  • பாதத்திற்கான மசார்ச்  முறையான நிவாரணத்திற்காக மருத்துவ தொடர்புகளுக்கு பரிந்துரை   செய்தல் 

கட்டணமாக ஆரம்ப பரிசோதனையுடன் சிகிச்சைக்கு $50ம் தொடர்ந்து வரும் சிகிச்சைக்கு $40 (சிகிச்சை நிலையங்களை விடவும் குறைவான கட்டணம்)

தொடர்புகளுக்கு :- நேசன் வேலுப்பிள்ளை B.Sc,RPN ( Certified Foot care Nurse)
Phone:519-222-8505

Tisho Foot Care

Many times we don't realize that even a small corn, callus, thick toenail, etc.. can cause such discomfort that can interfere with our everyday lives. In many cases, the most common foot problems can easily be treated by a nursing foot care professional. If you are unsure how to care for your feet, we are happy to assist you with your foot care needs such as.

  • -Diabetic Feet 
  • -Fungal Nails 
  • -Thick, Discoloured nails 
  • -Ingrown, Involuted toenails 
  • -Corns, Calluses 
  • -Heel Fissures 
  • -Hammer toe pain 


Nursing foot care treatment includes:


  • Routine assessment of the feet 
  • Roenail trimming and filing 
  • Treatment of corns and calluses 
  • Treatment of immediate concern 
  • Moisturizing foot rub 
  • Health Teaching 
  • Referrals and recommendations as needed

Initial Assessment and Treatment -$50 and Follow up $40

Contact: Nesan B.Sc,RPN ( Certified Foot care Nurse)                                              Phone:519-222-8505

Wednesday 16 January 2013

தைப்பொங்கல்-2013


தமிழ்க் கலாச்சாரப் பாடசாலை
வோட்டர்லூ -குவல்ப் வட்டாரம்
 (Thamil Heritage School of Waterloo Region and Guelph)
WWW.TAMILHERITAGE.CA


CGKW- தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடும்
தைப்பொங்கல்-2013
(Thai Pongkal 2013) 

Saturday, January 19, 2013 

இனிய 
புதுவருடத்தில்
CGKW நகர்களில் வாழும் 
புலம்பெயர் தமிழ் உறவுகள் நாம் 
ஒன்று கூடி
புத்தாடை கட்டி 
பொங்கல் செய்து
உண்டு மகிழ்வோம் வாரீர்
Date: Saturday, January, 19, 2013
Time: 1:00PM
Location: Christ Lutheran Church445 Anndale RoadWaterloo.

 Note: Traditional Dress Code of Thai Ponkal would be Preferred