Wednesday 15 February 2012

Happy Birthday to Cyril Francis Master

இன்று பிறந்தநாளைக் காணும் மதிப்பிற்குரிய திரு.சிறில் பிரான்சிஸ் மாஸ்ட்டர் அவர்களுக்கு இனிய உள்ளம் கனிந்த பிறந்ததின வாழ்த்துக்கள்!


1928 Feb 15ல்  நாரந்தனையில் பிறந்த இவர் - கொழும்பில் பிரபல வர்த்தகரான திரு.மானுவல்பிள்ளை அவர்களுக்கும், திருமதி.மாசிலாமணி  அவர்களுக்கும்  அருந்தவப்புதல்வராய் பிறந்தார்.

waterloo tamil association ஐ ஸ்தாபித்தவர்களில் ஒருவருமாகிய  இவர், ஒரு சிறந்த கல்விமான், எழுத்தாளர், ஓவியர், பண்பாளர், சமையல்கலை வல்லுனர், தலைவர், ஆசிரியர் என பல முகங்கள் இவருக்கு உண்டு.

1953ல் Madras Christan College விலங்கியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டு பின்னர்  'பரி யோவான்  இந்துக்கல்லூரி'யில்  சிறந்த  கெளரவம்  மிக்க ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சுகாதாரக்கல்வி, புதிய ரசாயணம், மீன் வளர்ப்பு, நுண்கணிதம், ஆள்கூற்றுக் கேத்திரகணிதம், அறமுறைக் கேத்திரகணிதம், இயக்கவிசையியல்,  பெளதீக பயிற்சி,  பொது விஞ்ஞானம், சிறுவர்கலுக்கான  தமிழ் கற்கும் நூல்கல்  போன்ற  பல  நூல்களை  வெளியிடுவதிலும்,  எழுதுவதிலும்  மிகப்பெரிய  பங்களிப்பை  தமிழ்  கல்வி சமுதாயத்துக்கு  செய்துள்ளார்.

விலங்கியல் போதகராகிய இவர், தாவரவியல் போதகரான யாழ்/சுண்டிக்குளி மகளீர் கல்லூரி ஆசிரியையான தங்கரானி ஆசிரியை அவர்களை மணந்து Botanyக்கும் Zoology க்கும் உண்டான Biologyயை நிரூபித்தார்!!!!?

இன்று தனது 84 வயதை  தாண்டி  அடியெடுத்து  வைக்கும் அன்புக்கும்  பொரும்  மதிப்பிற்கும் உரிய  பிரான்சிஸ் மாஸ்ட்டர், இன்னும்  பல்லாண்டு காலம் எம்முடன் வாழ்ந்து - அவரது குடும்பத்தாருக்கும், எம் சமுகத்திற்கும் இன்னது செய்யவேண்டும் என வாழ்த்துகின்றோம்!